Title of the document



மத்திய அரசின் நவரத்னா நிறுவனங்களில் ஒன்றான கெயில் நிறுவனத்தில் 233 இடங்கள் காலியாக உள்ளன. டிப்ளமோ படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் விவரம்:
1. Junior Engineer (Mechanical):
S-7 Grade :


2 இடங்கள் (எஸ்டி). தகுதி:


Mechanical/ Production/ Production & Industrial/ Manufacturing/ Mechanical & Automobile Engineering பாடத்தில் 55% மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்து 8 வருட பணி அனுபவம். 2. Junior Engineer (Chemical):
S-7 Grade:


3 இடங்கள் (எஸ்சி - 1, எஸ்டி - 2). தகுதி:


chemical/ Petrochemical/ chemical Technology/ Petrochemical Technology பாடத்தில் 55% மதிப்பெண்களுடன் டிப்ளமோ தேர்ச்சி மற்றும் 8 வருட பணி அனுபவம். 3. Junior Accountant:
S-5 Grade:


18 இடங்கள் (பொது - 12, எஸ்சி - 2, எஸ்டி - 1, ஒபிசி - 3). தகுதி:


CA/ICWA பாடத்தில் தேர்ச்சி அல்லது 60% மதிப்பெண்களுடன் எம்.காம்., முதுநிலை படிப்புடன் கம்ப்யூட்டர் திறன் அறிவு பெற்றிருக்க வேண்டும் அத்துடன் 2 வருட பணி அனுபவம். 4. Junior Superintendent (Human Resources):
S-5 Grade:


10 இடங்கள் (பொது - 6, எஸ்சி - 1, எஸ்டி - 2, ஒபிசி - 1). தகுதி:


55% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்புடன் Personnel Management/ Industrial Relations பாடத்தில் 55% மதிப்பெண்களுடன் டிப்ளமோ தேர்ச்சி மற்றும் கம்ப்யூட்டர் திறன் அறிவு பெற்றிருக்க வேண்டும். அத்துடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 5. Foreman (Polymer Technology):
S-5 Grade:


2 இடங்கள் (பொது - 1, ஒபிசி - 1). தகுதி:


Polymer Science and Chemical Technology/ Plastics and Rubber Technology/ Plastics Technology/ Polymer Science and Engineering/ Polymer Engineering/ Polymer Technology பாடத்தில் 60% மதிப்பெண்களுடன் டிப்ளமோ தேர்ச்சி 2 வருட பணி அனுபவம். 6. Foreman (Chemical):
S-5 Grade:


12 இடங்கள் (பொது - 4, எஸ்சி - 4, எஸ்டி - 1, ஒபிசி - 3). தகுதி:


Chemical/ Petrochemical/ Chemical Technology பாடத்தில் 60% மதிப்பெண்களுடன் டிப்ளமோ தேர்ச்சி பெற்று 2 வருட பணி அனுபவம். 7. Foreman (Mechanical):
S-5 Grade:


30 இடங்கள் (பொது - 14, ஒபிசி - 9, எஸ்சி - 7). தகுதி:


Mechanical/ Production/ Production & Industrial/ Manufacturing/ Mechanical & Automobile Engineering பாடத்தில் 60% மதிப்பெண்களுடன் டிப்ளமா தேர்ச்சி மற்றும் 2 வருட பணி அனுபவம். 8. Foreman (Electrical):
S-5 Grade:


30 இடங்கள் (பொது - 13, எஸ்சி - 4, எஸ்டி - 8, ஒபிசி - 5). தகுதி:


Electrical/ Electrical and Electronics Engineering பாடத்தில் 60% மதிப்பெண்களுடன் டிப்ளமோ தேர்ச்சி பெற்று 2 வருட பணி அனுபவம். 9. Foreman (Instrumentation):
S-5 Grade:


30 இடங்கள் (பொது - 15, எஸ்சி - 5, எஸ்டி - 8, ஒபிசி - 2). தகுதி:


Instrumentation/ Instrumentation & Control/ Electronics & Instrumentation/ Electrical & Instrumentation/ Electronics/ Electrical & Electronics Engineering பாடத்தில் 60% மதிப்பெண்களுடன் டிப்ளமோ தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம். 10. Foreman (Telecom & Telemetry):
S-5 Grade:


10 இடங்கள் (பொது - 5, எஸ்சி - 3, ஒபிசி - 2). தகுதி:


Electronics/ Electronics & Communication/ Electronics & Telecommunication/ Electrical & Electronics/ Electrical & Telecommunication Engineering பாடத்தில் 60% மதிப்பெண்களுடன் டிப்ளமோ தேர்ச்சி பெற்று 2 வருட பணி அனுபவம். 11. Junior Chemist:
S-5 Grade:


10 இடங்கள் (பொது - 4, எஸ்சி - 3, ஒபிசி - 3). தகுதி:


Chemistry பாடத்தில் 55% மதிப்பெண்களுடன் எம்.எஸ்சி பட்டம் பெற்று 2 வருட பணி அனுபவம். 12. Junior Superintendent (Official Language):
S-5 Grade:


2 இடங்கள் (பொது - 1, எஸ்சி - 1). தகுதி:


Hindi Literature பாடத்தில் ஆங்கிலத்தை ஒரு பாடமாகக் கொண்டு 55% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்று இந்தியிலிருந்து ஆங்கிலத்திலும், ஆங்கிலத்திலிருந்து இந்தியிலும் மொழி பெயர்ப்பில் டிப்ளமோ தேர்ச்சியுடன் கம்ப்யூட்டர் திறனறிவு பெற்றிருக்க வேண்டும். அத்துடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.13. Assistant (Stores & Purchase):
S-3 Grade:


20 இடங்கள் (பொது - 13, எஸ்சி - 1, எஸ்டி - 1, ஒபிசி - 5). தகுதி:


ஏதேனும் ஒரு பாடத்தில் 55% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்று கம்ப்யூட்டர் திறனறிவு பெற்றிருக்க வேண்டும். 14. Accounts Assistant:
S-3 Grade:


20 இடங்கள் (பொது - 13, எஸ்சி - 2, எஸ்டி - 1, ஒபிசி - 4). தகுதி:


55% மதிப்பெண்களுடன் பி.காம் பட்டம் பெற்று கம்ப்யூட்டர் திறனறிவு பெற்றிருக்க வேண்டும். 15. Marketing Assistant:
S-3 Grade:


19 இடங்கள் (பொது - 11, எஸ்சி - 4, எஸ்டி - 1, ஒபிசி - 3). தகுதி:


55% மதிப்பெண்களுடன் பி.காம்., பட்டம் பெற்று கம்ப்யூட்டர் திறனறிவு பெற்றிருக்க வேண்டும். 16. Officer (Security):
E-1 Grade:


15 இடங்கள் (பொது - 7, எஸ்சி - 1, எஸ்டி - 1, ஒபிசி - 6). தகுதி:


ஏதேனும் ஒரு பாடத்தில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் அல்லது Industrial Security பாடத்தில் டிப்ளமோ தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம். வரிசை எண்:


13 முதல் 15 வரையுள்ள பணிகளுக்கு பொது மற்றும் ஒபிசியினர் நிமிடத்திற்கு ஆங்கிலத்தில் 35 வார்த்தைகளும், எஸ்சி., எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் 30 வார்த்தைகளும் கம்ப்யூட்டரில் டைப் செய்யும் திறன் பெற்று ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்:


Grade S-7 பணிகளுக்கு ரூ.16,300 - 38,500, S-5 பணிகளுக்கு ரூ.14,500 - 36,000, S-3 பணிகளுக்கு ரூ.12,500 - 33,000, E-1 பணிக்கு ரூ.20,600 - 46,500. வயது:


5.11.2016 அன்று Grade S-7 மற்றும் E-1 பணிகளுக்கு 45 வயதிற்குள்ளும், S-5 பணிகளுக்கு 32க்குள்ளும், S-3 பணிகளுக்கும் 30 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிிவினருக்கு அதிகபட்ச வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தொழிற்திறன்தேர்வு/ Skill Test/ எழுத்துத்தேர்வு/ நேர்முகத்தேர்வு/ உடற்திறன் தேர்வு ஆகிய தேர்வுகளின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். Security Officer பணிக்கு மட்டும் உடற்திறன் தேர்வு நடத்தப்படும். விண்ணப்ப கட்டணம்:


E-1 பணிக்கு ரூ.200. இதர பணிகளுக்கு ரூ.50. இதை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். எஸ்சி., எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பதாரர்கள் www.gailonline.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post