Title of the document


தர்மபுரி: தர்மபுரி மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 25 சதம் மானியத்துடன் ₹5 லட்சம் வரை கடன் உதவி பெற தொழில்முனைய விரும்பும் இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தர்மபுரி மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பினை ஏற்படுத்தும் விதமாக, அவர்களின் சொந்த ஊரிலேயே குறு, சிறு உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்கள் தொடங்கவும், வேலைவாய்ப்பிற்காக இடம் பெயர்தலை தவிர்க்கவும் மற்றும் வறுமைக் கோட்டில் உள்ளவர்களின் வாழ்க்கைத் தரம் உயர வாய்ப்பு ஏற்படுத்தி தரவும் மானியத்துடன் கூடிய ₹5 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்பட உள்ளது.


இத்திட்டத்தின் கீழ் நகர மற்றும் ஊரகம் உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் உள்ள வேலைவாய்ப்பற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். உற்பத்தி தொழில்களுக்கு அதிகபட்சம் ₹5 லட்சம் வரையிலும், சேவை தொழில்களுக்கு அதிகபட்சமும் ₹3 லட்சமும், வியாபார நிறுவனங்களுக்கு ₹1 லட்சமும் வங்கிக் கடனாக வழங்கப்படும். திட்ட மதிப்பீட்டில் 25 சதவீத மானியமாக வழங்கப்படும். விவசாயம் மற்றும் விவசாயத்துடன் நேரடியான தொடர்புடைய இனங்களுக்கு இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெற இயலாது. விண்ணப்பதாரர்களில் பொது பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 35, சிறப்பு பிரிவினருக்கு அதிக பட்ச வயது வரம்பு 45 வயது வரையும் இருக்க வேண்டும்.

கல்வி தகுதியாக குறைந்தபட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் வருடத்திற்கு 1.5 லட்சத்திற்கு மேற்படாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரரோ, அவர்களின் குடும்பத்தினரோ எந்த ஒரு வங்கியிலும் தவணை தவறிய, கடன்தாரராக இருப்பின் இத்திட்டத்தின் கீழ் கடன் பெற முடியாது. மேலும், ஏற்கனவே வேறு எந்த துறை மூலமாகவும் அரசு மானியத்துடன் கூடிய கடன் திட்டத்தில் பயன் பெற்றவரும் இத்திட்டத்தின் கீழ் கடன் பெற தகுதியற்றவர் ஆவர்.

தொழில் முனைவோரின் பங்களிப்பாக திட்ட முதலீட்டில் 10 சதவீதம் தொகையினை பொதுப் பிரிவினரும், 5 சதவீதம் தொகையினை ஆதிதிராவிடர், பழங்குடியினர், பின் தங்கிய வகுப்பினர், மிகவும் பின் தங்கிய வகுப்பினர், சிறுபான்மையினர், பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள் , திருநங்கைகள் ஆகியோரும் வங்கியில் செலுத்த வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் தொழில் துவங்க ஆர்வமுள்ள தொழில் முனைவோர், மாவட்டத் தொழில் மையம், சிட்கோ தொழிற்பேட்டை, சேலம் மெயின் ரோடு, தர்மபுரி 636 705 என்ற முகவரியில், பொது மேலாளரை அணுகவும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post