Title of the document



லக்னோவிலுள்ள மத்திய கமாண்டன்ட் ராணுவ முதன்மை இயக்குநர் அலுவலகம் மற்றும் கிளை அலுவலகங்களில் காலியாக உள்ள சப்-டிவிசனல் ஆபீசர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி:


Sub Divisional Officer: 10 இடங்கள் (பொது - 3, ஒபிசி - 2, எஸ்சி - 1, முன்னாள் ராணுவத்தினர் - 2, மாற்றுத்திறனாளி - 2). வயது:


15.11.2016 அன்று 18 முதல் 27க்குள். தகுதி: மெட்ரிகுலேசன் அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி மற்றும் சிவில் பாடத்தில் டிப்ளமோ அல்லது 2 ஆண்டுக்கு குறையாத சான்றிதழ் படிப்பு.

அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும், முன்னாள் ராணுவத்தினருக்கு அவர்கள் ராணுவத்தில் இருந்த ஆண்டுகளுக்கு ஏற்பவும் தளர்வு அளிக்கப்படும். தேர்வு கட்டணம்:


ரூ.50. இதை Principal Director Defence Estates Central Command என்ற பெயரில் Lucknow Cantt., ல் மாற்றத்தக்க வகையில் டிடியாக எடுக்க வேண்டும். பெண்களுக்கும், மாற்றுத்திறனாளிகளும் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும். Technical Knowledge தாளுக்கு 120 மதிப்பெண்களும், Numerical Ability தாளுக்கு 15 மதிப்பெண்களும், Reasoning தாளுக்கு 15 மதிப்பெண்களும், Current Events தாளுக்கு 10 மதிப்பெண்களும், General English தாளுக்கு 10 மதிப்பெண்களும், Skill Test க்கு 30 மதிப்பெண்களும் என தேர்வு நடைபெறும். லக்னோவில் மட்டும் எழுத்துத் தேர்வு நடைபெறும்.

மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.dgde.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும். விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
The Principal Director,
Defence Estates,
Central Command,
17, Cariappa Road,
LUCKNOW CANTONMENT- 226002.
UTTAR PRADESH
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post