welcome to kalvinews

Friday, 11 August 2017

ஆகஸ்ட் 22 -ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் பங்கேற்க ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஜாக்டோ-ஜியோ அழைப்பு

22-08-2017-ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் பங்கேற்க ஜாக்டோ-ஜியோ அழைப்பு

அரசுபள்ளி ஏழை மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் - சென்னை சிறுதுளி கருணை உள்ளம் கொண்ட திரு.ஜெயா வெங்கட் ஆசிரியருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது kalvinews

அரசுபள்ளி ஏழை மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் - சென்னை சிறுதுளி
கருணை உள்ளம் கொண்ட திரு.ஜெயா வெங்கட் ஆசிரியர் மற்றும் சிறுதுளி குழுவிற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது- kalvinews



மகிழ்வித்து மகிழ்ந்தோம்...மனமே
எங்களது சென்னை
சிறு துளி குழு  கூடி சில நல்ல முடிவுகளை எடுத்துள்ளோம்...
எங்களால் முடிந்த உதவிகளை அனைத்து அரசு பள்ளிக்கும்,மாணவர்களுக்கும் செய்ய வேண்டும் என உறுதி எடுத்துக்கொண்டோம்
(ஏற்கனவே நாங்கள் எடுத்த முடிவின் படி 50 லிருந்து 75 அரசு பள்ளிக்கு இந்த கல்வி ஆண்டில் உதவ முடிவு செய்தோம்...)ஆனால் எங்கள் குழு உறுப்பினர்களின் மேன்மையான உளப்பூர்வமான உதவியினால் நேற்று வரை
55 அரசு பள்ளிகளின் விருப்பத்தை நேற்று வரை தொடர்ச்சியாக ஜீன் மாதம் ஒன்றாம் தேதியில் இருந்து நேற்று வரை தொடர்ச்சியாக Gift box அனுப்பி யுள்ளோம்...
மகிழ்வித்து மகிழ்...இதுவே எங்கள் மந்திரம்
.எங்களால் முடிந்த அத்தியாவசிய தேவைகளை பெற்று தருவது என முடிவெடுத்துள்ளோம்...
எனவே ஆசிரிய நண்பர்கள்
கீழ் உள்ள link ல் சேர்ந்து உங்கள் பள்ளி மற்றும் மாணவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை விபரத்தோடு பதிவிட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்...
நன்றி..
தலைமை ஆசிரியர் பெயர்
ஆசிரியர் பெயர்
மாணவர்களின் எண்ணிக்கை வகுப்பு வாரியாக
விலாசம்
எண்
தெரு பெயர்
ஊர் பெயர்
அஞ்சல் அலுவலகம்
மாவட்டம்
Pincode
கைப்பேசி எண்.
உங்கள் தேவைகளை விபரமாக கீழ்கண்ட link ல் இணைந்து பதிவிடுங்கள்.
நன்றி.
நிறுவனர் மற்றும் உறுப்பினர்..ஜெயா வெங்கட்
தலைவர் B விஜயகுமார்
மற்றும்  E விஜயகுமார்
பொருளாளர் ;ரஞ்சித் குவேரா
செயலாளர்கள்
ஹரீஷ் ரகு ராம்
பிரசன்னா பாலா..
நன்றி்..

ஆசிரியர் பிரச்சனையை தமிழக அரசு கண்டு கொள்வதில்லை – ஜாக்டோ ஜியோ ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் கோரிக்கைகள் பற்றி பேசாமல், தமிழக அரசு தனக்குள் இருக்கும் பிரச்சினைகளை மட்டுமே பேசி வருகிறது என்று ஜாக்டோ – ஜியோ கூட்டமைப்பு குற்றம் சாட்டி உள்ளது.

ஆசிரியர் பிரச்சனையை தமிழக அரசு கண்டு கொள்வதில்லை – ஜாக்டோ ஜியோ

ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் கோரிக்கைகள் பற்றி பேசாமல், தமிழக அரசு தனக்குள் இருக்கும் பிரச்சினைகளை மட்டுமே பேசி வருகிறது என்று ஜாக்டோ – ஜியோ கூட்டமைப்பு குற்றம் சாட்டி உள்ளது. தமிழக ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்களின் ஒருங்கிணைந்த அமைப்பான ஜாக்டோ – ஜியோ கூட்டமைப்பின் உயர்மட்ட குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.

இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 22ம் தேதி ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தை நடத்துவது என்றும் கோரிக்கை ஏற்கப்படாத பட்சத்தில் செப்டம்பர் மாதம் 7ம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் தியாகராஜன், அவர்களுக்குள் இருக்கும் பிரச்சனை பற்றி மட்டுமே பேசுவதாகவும், ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் பிரச்சனையை தமிழக அரசு கண்டு கொள்வதில்லை என்று குற்றம் சாட்டினர்.

CPS : 2016 -17 ஆம் ஆண்டுக்கான CPS ACCOUNT SLIP - இன்று (11.08.2017) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்...

CPS : 2016 -17 ஆம் ஆண்டுக்கான CPS ACCOUNT SLIP - இன்று (11.08.2017) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்...

CPS அன்பர்கள் 2016-17 ஆம் ஆண்டின் கணக்கீட்டுத்தாளை கீழ்கண்ட link ல் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்!!

http://cps.tn.gov.in/public/accountslip.php

Thursday, 10 August 2017

NET தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம். சி.பி.எஸ்.இ அறிவிப்பு

நீட் தேர்விலிருந்து மாணவர்களுக்கு விலக்கு அளிக்க முடியாது... உச்ச நீதிமன்றம் அதிரடி


'நடப்பாண்டில், நீட் தேர்விலிருந்து மாணவர்களுக்கு விலக்கு அளிக்க முடியாது' என்று உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரி, மாணவ அமைப்புகள் தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீட் தேர்வு வினாத்தாள்கள் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபட்டிருப்பதாக மாணவ அமைப்புகள் சார்பில் வாதிடப்பட்டது. நீட் தேர்வில் மாறுபட்ட வினாத்தாளை வழங்கியது ஏன் என்று சிபிஎஸ்இ-க்கு கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், மாறுபட்ட வினாத்தாளை வழங்கியது ஏற்புடையது அல்ல என்றும் கருத்து தெரிவித்துள்ளது. நீட்  நுழைவுத் தேர்வுக்கென பொதுவான வினாத்தாள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, சிபிஎஸ்இ மற்றும் மத்திய அரசு தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல்செய்ய கால அவகாசம் அளித்து, வழக்கு விசாரணையை அக்டோபர் 10-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி தமிழக அமைச்சர்கள், எம்.பி-க்கள், மத்திய அரசை வலியுறுத்திவருகின்றனர்.

FLASH NEWS : BT TO PG PROMOTION COUNSELLING WILL HELD ON 11.08.2017 - DIRECTOR PROCEEDINGS

விடுமுறை எடுக்காமல் வரும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்!

விடுமுறை எடுக்காமல் வரும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்!

எந்த வேலையாக இருந்தாலும் சரி அதில் நேரம் தவறாமை மிக அவசியம். ஒழுங்கு முறையின் கீழ் வரும் இந்தப் பழக்கம் உயர்ப் பணிகளிலும் நம்மை அமர வைக்கும். அது பள்ளிகளிலிருந்தே தொடங்கினால் வாழ் முழுக்க அந்த மாணவர்கள் சிறந்து விளங்க முடியும்.
 

பள்ளிக் கல்லூரிப் படிப்புகளை முடித்தப் பிறகு அவர்கள் செல்லும் பணிகளிலும் அவர்கள் சரியான நேரத்திற்காக பாராட்டுக்களைப் பெறுவதோடு, பதவியுயர்வும் பெற முடியும். இந்த காலம் தவறாமை மற்றும் விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கும் வரும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கும் ஒரு முக்கியமான செய்தியை பள்ளிக் கல்வி இயக்குநரகம் ஒரு பாராட்டுச் சான்றிதழ் வழங்கவுள்ளது.

அரசுப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் ஆண்டு முழுவதும் தொடர்ந்து விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு வந்தால் அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என்று தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் உயர்நிலை பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளிக்கு விடுமுறை எடுக்காமல் வரும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் லிஸ்டினை பள்ளிக் கல்வி இயக்குநரகம் கேட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் பதினொன்றாம் தேதிக்குள் படிவத்தை பூர்த்தி செய்து இணை இயக்குநர் (தொழிற்கல்வி) முகவரிக்கு மெயில் அனுப்பும்படி அறிவிக்கப்பட்டுள்ளது

Wednesday, 9 August 2017

இந்த கருத்துகணிப்பில் தங்கள் கருத்தை நம் கல்வித்துறை செயலருக்காக பதிவு செய்யுங்கள்

இந்த கருத்துகணிப்பில் தங்கள் கருத்தை நம் செயலருக்காக பதிவு செய்யுங்கள்

Dear friends intha link la poitu vikatan la vote pannungaa..

For our secretary sir

http://www.vikatan.com/news/tamilnadu/98545-what-is-your-opinion-about-school-education-secretary-udayachandran.html

DSE PROCEEDINGS- Higher Secondary H. M. Promotion counseling will be conducted Tomorrow 10/08/2017 ( THURSDAY )

DSE PROCEEDINGS- Higher Secondary H. M. Promotion counseling will be conducted Tomorrow 10/08/2017 ( THURSDAY ) 

பள்ளிகளில் குடற்புழு நீக்கம் சிறப்பு முகாம்

நாளை தேசிய குடற்புழு நீக்க நாளாக அறிவிக்கப்பட்டு, பள்ளிகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இந்தியாவில், 1 முதல், 14 வயது வரையுள்ள குழந்தைகளில், 24.1 கோடி பேருக்கு குடற்புழு தொற்று அபாயம் இருப்பதாக, உலக சுகாதார நிறுவன ஆய்வில் தெரிந்துள்ளது. 

இதனால், ரத்தசோகை, ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. மேலும், பசியின்மை, வாந்தி, வயிற்று வலி, வயிற்று போக்கு, வைட்டமின், 'ஏ' சத்து குறைவு ஏற்படுகிறது.இதை தவிர்க்க, நாளை, நாடு முழுவதும் அங்கன்வாடி மையம், பள்ளிகளில் குடற்புழு நீக்க சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

Flash News:ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நீதிமன்றம் அனுமதி

3456 முதுநிலை ஆசிரியர்கள்,உடற்தகுதி இயக்குநர் பணியிடங்களை நிரப்ப நீதிமன்றம் அனுமதி.

மாற்றுத்திறனாளிகள் இடத்தை நிரப்ப தடை

4% ஒதுக்கீடு மாற்றுத்திறனாளிகளுக்கான 140 இடங்களை தற்போதைக்கு நிரப்பக்கூடாது.

மாற்றுத்திறனாளிகளின் உடற்குறைபாடு தன்மை குறித்து 2 வாரத்தில் பரிசீலிக்கப்படும் என தமிழக அரசு கூறியதை அடுத்து மாற்றுத்திறனாளிகள் உடற்குறைபாட்டை நிர்ணயிக்கும் வழக்கு விசாரணை ஆக.28 க்கு ஒத்திவைக்கப்பட்டது.

DEPLOYMENT NEWS : ஆசிரியர் பணி நிரவல் மீண்டும் நடத்தப்படுமா?

DEPLOYMENT NEWS : ஆசிரியர் பணி நிரவல் மீண்டும் நடத்தப்படுமா?

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் குறைவான மாணவர்களுக்கு கூடுதலான ஆசிரியர்களும், அதிக மாணவர்களுக்கு குறைவான ஆசிரியர்களும் பணிபுரியும் நிலை உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில், ஆக.1 ஆம் தேதி மாணவர் சேர்க்கை அடிப்படையில் மீண்டும் பணி நிரவல் நடத்த வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், ஆகஸ்ட் முதல் தேதி அன்று மாணவர்களின் எண்ணிக்கையை கணக்கீடு செய்து, அதன் அடிப்படையில் பணி நிரவல் நடைபெறுவது வழக்கம்.

பல ஆண்டுகளாக பின்பற்றி வந்த நடைமுறை, தற்போது முதல் முறையாக மாற்றப்பட்டுள்ளது. முந்தைய கல்வி ஆண்டின் (2016-17) மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர்கள் பணி நிரவல் நிகழாண்டில் நடத்தப்பட்டது. பள்ளிக் கல்வியில் மாவட்டத்திற்குள்ளும், தொடக்க கல்வித்துறையில் வட்டார அளவிலும் ஆசிரியர்கள் பணி நிரவல் நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 2017}18 ஆம் கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கை என்பது சில பள்ளிகளில் அதிகரித்தும், பல பள்ளிகளில் குறைந்தும் உள்ளது. இதனை கருத்தில் கொள்ளாமல், முன்னதாக ஆசிரியர் பணி நிரவல் நடைபெற்றதன் காரணமாக 2017}18 ஆம் கல்வி ஆண்டில், பல பள்ளிகளிலும் குறிப்பாக உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 100க்கும் குறைவான மாணவர்களுக்கு 10 ஆசிரியர்கள் வரை பணிபுரியும் நிலை உள்ளது. 

அதே நேரத்தில், அதிக மாணவர்கள் பயிலும் பள்ளிகளில் குறைவான ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 160 மாணவர்களுக்கு குறைவான பள்ளிகளில் 5 ஆசிரியர்களும், 160க்கும் கூடுதலான மாணவர்கள் உள்ள பள்ளிகளில் 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதமும் பணிபுரியும் வகையில், பணி நிரவல் அமைய வேண்டும் என்பதே அரசின் விதிமுறையாக உள்ளது. ஆனால், வழக்கத்திற்கு மாறாக மே மாதமே பணி நிரவல் நடைபெற்றதால், தற்போது பல பள்ளிகளிலும் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளில், மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கும் அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், தாற்காலிக ஆசிரியர்களை நியமித்து வகுப்புகளை நடத்துகின்றனர். இதனிடையே, 2017 மே 31ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் பலர் ஓய்வுப் பெற்றுள்ளதால், அந்த காலிப் பணியிடங்களும் தற்போது கூடுதல் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளன. 

மேலும் குறைவான மாணவர்கள் கொண்ட பள்ளியில், அதிக ஆசிரியர்கள் பணிபுரிவதால் அரசு சார்பில் ஊதியத்திற்காக செலவிடப்படும் பணமும் பயனில்லாமல் போவதாக பெற்றோர்கள் கூறுகின்றனர். இதுபோன்ற நடைமுறை சிக்கல்களுக்கு உடனடியாக தீர்வு காணும் வகையில், மீண்டும் பணி நிரவல் நடத்தி, உபரியாக உள்ள ஆசிரியர்களைக் கொண்டு, காலியாக உள்ள இடங்களை நிரப்ப வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதுதொடர்பாக ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: கல்வியாண்டின் தொடக்கத்திலோ, இடைப்பட்ட காலத்திலோ ஆசிரியர்கள் பணி ஓய்வு நாள் வந்தாலும், அவருக்கு அந்த கல்வியாண்டின் இறுதி ( மே 31ஆம் தேதி) வரை பணி புரிவதற்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. 

ஆனால் நிகழாண்டில் மே மாதமே பணி நிரவல் நடத்தப்பட்டதால், அதற்கு பின் ஓய்வுப் பெற்ற ஆசிரியர்கள் குறித்த பட்டியல் கணக்கிடப்படவில்லை. மேலும், ஆகஸ்ட் முதல் நாளிலேயே மாணவர் சேர்க்கை விவரம் சேகரிக்கப்படுகிறது. அதற்கு முன்னதாக பணி நிரவல் நடத்தப்பட்டதால், தற்போது உபரி பணியிடங்கள் மற்றும் பற்றாக்குறை பிரச்னை எழுந்துள்ளது.

மே மாதம் நடைபெற்ற பணி நிரவலின் போதும், மாவட்ட வாரியாக ஒரு பாடத்திற்கு 10க்கும் குறைவான பணியிடங்களுக்கு மட்டுமே பணி நிரவல் நடைபெற்றன. வட மாவட்டங்களில் குறிப்பாக, விழுப்புரம், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மீண்டும் முறையாக பணி நிரவல் நடைபெற்றால் மட்டுமே, ஆசிரியர் பற்றாக்குறை பிரச்னைக்கு முடிவு ஏற்படும் என்றார்

Saturday, 5 August 2017

அதிர வைத்த அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள்.! மிரண்டு போன அரசு..!! சென்னை திணறியது, போக்குவரத்து ஸ்தம்பித்தது...!!! தமிழக அரசுக்கு எதிராக திரண்ட சுமார் 3 லட்சம் அரசு ஊழியர்கள்!

அதிர வைத்த அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள்.!
மிரண்டு போன அரசு..!!
சென்னை திணறியது,
போக்குவரத்து ஸ்தம்பித்தது...!!!

தமிழக அரசுக்கு எதிராக திரண்ட
சுமார் 3 லட்சம் அரசு ஊழியர்கள்!

தமிழகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் அரசு ஆசிரியர்கள் சம்பள விவகாரம் தொடர்பாக சென்னை சேப்பாக்கதில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

2016-ஆம் ஆண்டு ஜாக்டோ மற்றும் ஜியோ ஆகிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தக் கோரியும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரியும் போராட்டம் அறிவிக்கப்பட்டு இரண்டு நாட்கள் போராட்டம் நடைபெற்றது. அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அளித்த வாக்குறுதியின் பெயரில் போராட்டம் கைவிடப்பட்டது. அதன் பின்னர் அதிமுகவின் தேர்தல் வாக்குறுதியிலும் இது கூறப்பட்டு இருந்தது. இதேபோல கடந்த 2003-ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டதால் தமிழக அரசு ஸ்தம்பித்தது.

அரசு ஊழியர்களின் கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆய்வுசெய்ய கமிட்டி அமைக்கபட்டு ஒரு ஆண்டு ஆகியும் எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்தநிலையில் மீண்டும் போராட்டம் அறிவிப்பது குறித்து அரசு ஊழியர்கள் மற்றும் அரசு ஆசிரியர்களின் சங்கங்கள் கடந்த ஜூலை 11 ஆம் தேதி கூடி முடிவு எடுத்தனர்.

அந்த ஆலோசனையில் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். அமல்படுத்தும் வரை 20 சதவிகிதம் இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று கட்ட போராட்டம் நடத்துவது எனவும், ஜுலை 13ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டங்களூம், ஜூலை 18ம் தேதி மாலை 5 மணிக்கு மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் ஆகஸ்ட் 5ம் தேதி கோட்டை நோக்கி பேரணி செல்ல வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.
பேரணிக்கான அனுமதி கோரி, சென்னை மாநகரக் காவல் துறையிடம் கடிதம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், பேரணிக்கான அனுமதி மறுக்கப்பட்டது.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் தொடர்வது, எட்டாவது ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்துவதும், இடைப்பட்ட காலத்தில் இடைக்கால நிவாரணமாக 20 சதவிகித ஊதியம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் பேரணி நடத்தத் திட்டமிட்டிருந்தனர்.

சென்னை மன்றோ சிலையிலிருந்து தொடங்கி, தலைமைச்செயலத்தில் முடிவடையும் விதத்தில் பேரணிக்கான அனுமதி கோரியிருந்தனர். இந்நிலையில், பேரணிக்கு ஏன் அனுமதி மறுக்கக்கூடாது எனக் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு காவல்துறை பதில் அனுப்பியது. பின்னர் ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது. இதற்கு காவல்துறை அனுமதி அளித்தது. இதையடுத்து, இன்று காலை சென்னை, வாலாஜா சாலையிலுள்ள விருந்தினர் மாளிகை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதுமிருந்து சுமார் 3 இலட்சம்  ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள்  கலந்துகொண்டனர். அங்கு தங்கள் கோரிக்கை வலியுறுத்தி முழக்கமிட்டனர். ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் குவிந்ததால் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டம் அதிர்ந்தது.இதனால் எடப்பாடி அரசு மிரண்டு போய் உள்ளது என்பதே உண்மை.

ஜாக்டோ ஜியோ போராட்டத்தால் சென்னை  திணறியது..

போக்குவரத்து ஸ்தம்பித்தது...

இன்று 5.8.2017 சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரே CPS இரத்து செய்தல் உட்பட பல நியாயமான கோரிக்கைகளை முன் வைத்து ஜாக்டோ ஜியோ சார்பில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சுமார் 3 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று கோரிக்கைகளை எடுத்து கோரினர். இந்த நிகழ்வில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அலைகடல் போல் திரண்டதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. எம்.ஜி.ஆர்&ஜெயலலிதா சமாதியில் திரண்ட போராட்டக்குழுவினரை சமாளிக்க முடியாமல் காவல்துறை திணறியது.

முன்னதாக  இன்று கோட்டையை நோக்கி போராட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசு ஊழியர்கள் நேற்று இரவு முதல் சென்னையை நோக்கி வர தொடங்கினார்கள்.அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தும் நிலையில் பல்வேறு இடங்களில் அரசு ஊழியர்கள் வந்த வண்டிகளை காவல்துறை தடுத்து நிறுத்தியது.

காவல்துறையில் தடையை மீறி கோட்டையை முற்றுகையிட சென்னை சேப்பாக்கதில் பல்லாயிர கணக்கான அரசு ஊழியர்கள் ஒன்று கூடிகோஷமிட்டனர்.அரசு ஊழியர்கள் ஒன்று கூடியதால் சேப்பாக்கம் வழியாக செல்லும் சாலைகள் காலை முதலே ஸ்தம்பித்து இருக்கிறது.போராட்டத்திற்கு வருபவர்கள் காவல்துறை கைது செய்வதை முக.ஸ்டாலின்,ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்

Wednesday, 2 August 2017

சித்தா, ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட ஆயுஷ் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் வினியோகம்

சித்தா, ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட ஆயுஷ் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் வழங்கப்படவுள்ளன.விண்ணப்பங்களை சென்னை, மதுரை, பாளையங்கோட்டை உள்ளிட்ட 6 இடங்களில் உள்ள அரசு கல்லூரிகளில் பெற்று கொள்ளலாம் அல்லது விண்ணப்பங்களை https://t.co/e5HpsQykBm என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்