welcome to kalvinews

Sunday, 1 January 2017

மோடியின் புத்தாண்டு உரையில் இடம்பெற்றுள்ள சில முக்கிய அறிவிப்புகள் இவைதான் ! பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின்போது பல்வேறு பிரிவு மக்களுக்கும் பல சலுகைகளை அறிவித்தார்.

மோடியின் புத்தாண்டு உரையில் இடம்பெற்றுள்ள சில முக்கிய அறிவிப்புகள் இவைதான் !

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின்போது பல்வேறு பிரிவு மக்களுக்கும் பல சலுகைகளை அறிவித்தார்.

பிரதமர் மோடி புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு தொலைகாட்சி வாயிலாக உரையாற்றினார். அப்போது பல்வேறு சலுகைகளை அறிவித்தார். அதில் முக்கியத்துவம் வாய்ந் சில அம்சங்கள்:

*மூத்த குடிமக்கள் ரூ.7.5 லட்சம் 10 ஆண்டுகளுக்கு டிபாசிட் செய்தால் 8 சதவீதம் வட்டி வழங்கப்படும்

*கர்ப்பிணி பெண்களுக்கு பேறு கால செலவுக்காக உதவும் வகையில், மத்திய அரசு சார்பில் ரூ.6000 உதவித் தொகை அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும் இந்த திட்டம் நாடு முழுக்க முதல் கட்டமாக 650 மாவட்டங்களில் கொண்டு வரப்படும்.

*சிறு குறு தொழில்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும். சிறு வணிகர்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படும்.

*சொந்த வீடு கட்டுபவர்களுக்கு 9 லட்சம் ரூபாய் வரை 4 சதவீத வட்டியில் கடன் வழங்கப்படும். ரூ.12 லட்சம் வரை கடன் பெறுவோருக்கு 3% வட்டி விலக்கு அளிக்கப்படும்.

*விவசாயிகளின் குறிப்பிட்ட சில கடன்களின் 60 நாட்களுக்கான வட்டியை அரசே ஏற்கும். வங்கிக் கடன் பெற்று விதைக் கொள்முதல் செய்யப்பட்ட விவசாயிகளுக்கு 60 சதவீதம் வரிச்சலுகை அளிக்கப்படும்.

*சிறிய வர்த்தகத்திற்கான ரொக்க கடன் வரம்பு 20 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்தப்படும்.

கல்வித் தகுதியை மறைப்பதும் பணி நடத்தை விதிமீறல்தான் உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு. கல்வித்தகுதியை மறைத்து பணிக்கு சேருவதும் ஒரு நடத்தை விதிமீறல்தான் என உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், பணி நீ்க்கத்தை எதிர்த்த வங்கி ஊழியரின் மனுவை தள்ளுபடி

கல்வித் தகுதியை மறைப்பதும் பணி நடத்தை விதிமீறல்தான் உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு.

கல்வித்தகுதியை மறைத்து பணிக்கு சேருவதும் ஒரு நடத்தை விதிமீறல்தான் என உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், பணி நீ்க்கத்தை எதிர்த்த வங்கி ஊழியரின் மனுவை தள்ளுபடி செய்தனர். யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் பகுதி நேர பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்த பி.சுடலைமுத்து, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவில், 
''நான் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவன். கடந்த 2008-ம் ஆண்டு கல்வித்தகுதியை மறைத்து நான் வங்கிப் பணியில் சேர்ந்ததாகக் கூறி வங்கி நிர்வாகம் என்னை பணி நீக்கம் செய்தது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். ஆனால் என்னை பணிநீக்கம் செய்தது சரியானதுதான் என தனி நீதி பதி உத்தரவிட்டுள்ளார். ஆகவே அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்'' என்று கோரி யிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ் மற்றும் எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு விவரம் வருமாறு:

 எந்த ஒரு வங்கியோ அல்லது நிறுவனமோ, தங்களது பணியாளர்களை தேர்வு செய்ய தங்களுக்கென தனிப்பட்ட விதிமுறைகளை வகுத்து வைத் துள்ளன. பணியாளர்களின் கல்வித்தகுதியும் அதில் முக்கியமான ஒன்று. குறிப்பிட்ட பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் கண்டிப்பாக அந்த கல்வித் தகுதியை பூர்த்தி செய்திருக்க வேண்டியது அவசியமானது மட்டுமல்ல, சட்டப்படியானதும் கூட. மனுதாரர் யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் பகுதிநேர பராமரிப்பு மற்றும் தூய்மை பணியாளர் பணி்க்கு கடந்த 2008-ல் விண்ணப்பித்துள்ளார். அந்த வேலைக்கு குறைந்த பட்ச கல்வித்தகுதியாக இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி அல்லது எட்டாம் வகுப்பில் தோல்வியுற்றவர்கள் விண்ணப் பிக்க வங்கி நிர்வாகம் அறிவிப்பு செய்துள்ளது. அதன்படி, மனுதாரர் தான் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் என்ற உண்மையை மறைத்து, 5-ம் வகுப்பு மட்டுமே தேர்ச்சி பெற்றிருப்பதாக மாற்றுச் சான் றிதழைக் காட்டி பணிக்கு சேர்ந் துள்ளார். அதன்பிறகு வங்கி நிர்வாகம் அதே ஆண்டு பியூன் வேலைக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு செய்த போது, இதே மனுதாரர் தான் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் எனக்கூறி அந்த பணிக்கும் விண்ணப்பித்துள்ளார். வங்கி நிர்வாகம் உண்மையைக் கண்டு பிடித்து அவரை பணி நீக்கம் செய்துள்ளது.

நடத்தை விதிமீறல் மனுதாரர் உண்மையை மறைத்து பராமரிப்பு மற்றும் தூய்மை பணியாளர் பணிக்கு சேர்ந்ததால் அந்த பணியிடம் உரிய நபர்களுக்கு கிடைக்காமல் போய்விட்டது. அரசு அல்லது வங்கி பணிகளில் உண்மையை மறைப்பது என்பது நடத்தை விதிமீறல்தான். எனவே மனு தாரரை பணி நீக்கம் செய்தது சரியானதுதான். தனி நீதிபதி சரியான உத்தரவைத்தான் பிறப் பித்துள்ளார் என்பதால் இந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கற்பித்தல் திறனை மேம்படுத்த பள்ளி ஆசிரியர்களுக்கு ஐனவரியில் சிறப்பு பயிற்சி: அனைவருக்கும் கல்வி இயக்ககம் ஏற்பாடு தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்க ளின் கற்பித்தல் திறனை மேம்படுத்த ஜனவரியில் சிறப்பு பயிற்சி அளிக்க அனைவருக்கும் கல்

கற்பித்தல் திறனை மேம்படுத்த பள்ளி ஆசிரியர்களுக்கு ஐனவரியில் சிறப்பு பயிற்சி: அனைவருக்கும் கல்வி இயக்ககம் ஏற்பாடு

தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்க ளின் கற்பித்தல் திறனை மேம்படுத்த ஜனவரியில் சிறப்பு பயிற்சி அளிக்க அனைவருக்கும் கல்வி இயக்ககம் ஏற்பாடு செய்துள்ளது.ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் வகையில்மாநில ஆசிரியர் கல்வியியல் பயிற்சி நிறுவனமும் அனைவருக்கும் கல்வி இயக்ககமும் இணைந்து அவர்களுக்கு அவ்வப்போது பணியிடைப் பயிற்சியை அளித்து வருகின்றன.

இந்த நிலையில், போட்டித்தேர்வு களுக்கு மாணவர்களை தயார்படுத்தவும், புரிதல் திறனை மேம்படுத்தவும் தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஜனவரி மாதம் சிறப்பு பயிற்சி அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மாநில அனை வருக்கும் கல்வி திட்ட இயக்குநர்பூஜா குல்கர்னி, அனைத்து மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள ஒரு சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

மாநில அளவில் தொடக்க, நடு நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான புரிதல் மேம்பாட்டு புத்தாக்கப் பயிற்சி ஜனவரி 11-ம் தேதியும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு போட்டித்தேர்வு களுக்கான தயாரிப்பு பயிற்சி ஜனவரி 12-ம் தேதியும் நடைபெறும். கடந்த முறை மாநில அளவில் பங்கேற்ற கருத்தாளர்கள் இதில் பங்கேற்க வேண்டும்.

 மேலும், மாவட்ட அளவில் புரிதல் மேம்பாட்டு புத்தாக்கப்பயிற்சி தொடக்கநிலை ஆசிரி யர்களுக்கு ஜனவரி18-ம் தேதியும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு போட்டித்தேர்வுகளுக்கான தயாரிப்பு பயிற்சி ஜனவரி 19-ம்தேதியும் நடத்தப் படும்.இதேபோல், குறுவள மைய அளவில் புரிதல் மேம்பாட்டு புத்தாக்கப்பயிற்சி தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு ஜனவரி 21-ம் தேதியும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு போட்டித் தேர்வுக ளுக்கான தயாரிப்பு பயிற்சி ஜனவரி 22-ம் தேதியும் நடைபெறும்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவில் மாற்றம். தமிழகம் முழுவதும், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் பெற, ஓராண்டு தாமதத்திற்கு பிறகு பதிவு செய்வதற்கு, நீதிமன்றத்தில் உத்தரவு பெற வேண்டும் என்ற நடைமுறை, தற்போது அமலில் இருந்து வந்தது.

பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவில் மாற்றம்.

தமிழகம் முழுவதும், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் பெற, ஓராண்டு தாமதத்திற்கு பிறகு பதிவு செய்வதற்கு, நீதிமன்றத்தில் உத்தரவு பெற வேண்டும் என்ற நடைமுறை, தற்போது அமலில் இருந்து வந்தது.
இந்த நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டு, வருவாய் கோட்டாட்சியரின் உத்தரவு பெற்றாலே, தாமதமான, பிறப்பு, இறப்புகளை பதிவு செய்யலாம் என, உள்ளாட்சிகள் மற்றும், பிறப்பு, இறப்பு பதிவு அதிகாரிகளுக்கு, சுகாதார துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

''ஐ.ஏ.எஸ். தேர்வில் வென்ற அரசுப் பள்ளி மாணவி'' தனது பள்ளிக்குச் சிறப்பு விருந்தினராக வந்த மாவட்ட ஆட்சியரைப்போல நானும் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவேன் என்று உறுதிகொண்டு, அதைச் செய்து காட்டிய சாதனையாளர் ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தை சேர்ந்த வான்மதி.

''ஐ.ஏ.எஸ். தேர்வில் வென்ற அரசுப் பள்ளி மாணவி''

தனது பள்ளிக்குச் சிறப்பு விருந்தினராக வந்த மாவட்ட ஆட்சியரைப்போல நானும் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவேன் என்று உறுதிகொண்டு, அதைச் செய்து காட்டிய சாதனையாளர் ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தை சேர்ந்த வான்மதி.

சமீபத்தில் ஐ.ஏ.எஸ். தேர்வு முடிவு கள் வெளியாகின. அதில் அகில இந்திய அளவில் 152- வது ரேங்க் பெற்று வெற்றி பெற்ற வான்மதி, அரசுப் பள்ளி மாணவிகளின், ‘ரோல் மாடலாக’ மாறியுள்ளார். அப்பா சென்னியப்பன் கார் ஓட்டுநர். அம்மா சுப்புலட்சுமி இல்லத்தரசி. நாட்டில் உள்ள கோடிக்கணக்கான நடுத்தரக் குடும்பங்களில் ஒன்றுதான் வான்மதியின் குடும்பம்.

ஒரு தீப்பொறி

சத்தியமங்கலம் அரசுப் பள்ளியில் 6- ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிப்பு. அப்போதுதான் இந்தச் சாதனைக்கான முதல் வித்து ஊன்றப்பட்டுள்ளது. பள்ளி விழாவில் அப்போதைய ஈரோடு ஆட்சியர் உதயசந்திரன் பங்கேற்ற நிகழ்வுதான் வான்மதியின் இன்றைய சாதனைக் கான முதல் படிக்கட்டாக அமைந்தது.

அந்த நாளை வான்மதி நினைவுகூரும்போது, “எங்க பள்ளி விழாவில் பங்கேற்கக் கலெக்டர் வர்றார்... கலெக்டர் வர்றார்னு ஒரே பரபரப்பா இருந்துச்சு. கலெக்டர் என்ற அதிகாரிக்குக் கிடைத்த மரியாதை என் ஆழ்மனதில் பதிந்து விட்டது. இவர் கல்வியால் உயர்ந்தவர். நன்றாகப் படித்தால் கலெக்டரைப் போல் மரியாதைக்குரிய பதவிகளுக்கு வர முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலெக்டர் உதயசந்திரன் கல்வியை வலியுறுத்தியதும் என் மனதில் நிலையாய் நின்று விட்டது.

கல்வியால் எந்த நிலையையும் மாற்ற முடியும் என்று என் பள்ளி ஆசிரியர்கள் போதித்த கருத்துக்கு, ஒரு ‘தீப்பொறி’ போல இந்தப் பள்ளி விழா அமைந்தது” என்று நினைவுகளில் மூழ்கினார்.

ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றியடைந்த பிறகு, அதே பள்ளி வளாகத்தில் ஒரு சிறப்பு விருந்தினராக வான்மதி பேசியபோது கண் கலங்கியுள்ளார்.

சாதனையின் படிக்கட்டுகள்

பள்ளிப் படிப்புக்குப் பின் பி.எஸ்சி. பட்டப்படிப்பை முடித்துள்ளார். கல்லூரித் தோழியின் அப்பாவான சுங்க இலாகா அதிகாரி பாலசுப்பிரமணியனின் நம்பிக்கையான வார்த்தைகள் வான்மதியை அடுத்த படியில் ஏற்றி வைத்துள்ளன. ‘எனது ஐ.ஏ.எஸ். ஆசை சாத்தியமானதுதான் என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்லி, எளிய குடும்பத்தில் இருந்து கலெக்டரானவர்கள் குறித்த பத்திரிக்கைச் செய்திகளைக் காட்டி, கனவுக்கு உரமிட்டவர் இவர்’ என்று நெகிழ்ச்சியாய்ப் பதிவு செய்தார் வான்மதி.

2010- ம் ஆண்டு முதல் சென்னை வாழ்க்கை. 2011- ல் முதலிரண்டு கட்டங்களில் வெற்றி பெற்று நேர்முகத் தேர்வு வரை சென்றவருக்கு வெற்றி கைகூடவில்லை. உங்களிடம் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெறும் திறமை இருக்கிறது என்று சங்கர் ஐ.ஏ.எஸ்.அகாடமியின் இயக்குநர் சங்கர் நம்பிக்கையளித்துள்ளார்.

கார் டிரைவரான அப்பாவிடம் இருந்து வரும் சிறு தொகையில் தலைநகரில் வாழ முடியாத நிலை யில், அகாடமியிலேயே இரண்டு ஆண்டுகள் பயிற்சியாளராகப் பணிபுரிந்துள்ளார். அதோடு தொடர்ச்சியாக ஆண்டுதோறும் தேர்வுகளை எழுதி வெற்றிக்கான கதவுகளைத் தொடர்ந்து தட்டியுள்ளார்.

உதவிய கரங்கள்

‘‘விடுதியில் தங்க, தேர்வுக்குச் செல்ல எனச் செலவுகளைச் சமாளிக்கவும், நம்பிக்கையை விடாமல் தொடர்ந்து தேர்வுகளை எதிர்கொள்ளவும் ஐ.ஆர்.எஸ். அதிகாரிகள் பாக்கியதேவி, விவேகானந்தன், ஐபிஎஸ் அதிகாரி சைலேந்திரபாபு ஆகியோர் உதவினர். இரண்டு ஆண்டுகள் அகாடமியில் பயிற்சியாளராக இருந்தது எனக்குத் தனித்தன்மையை உருவாக்கித் தந்தது.

கற்பித்தல்தான் கல்வி முறையின் உச்சகட்டம் என்பதை உணர முடிந்தது. படித்துப் புரிந்து கொண்டு, அதனை மற்றவர்களுக்குப் புரிய வைப்பது என்பது எளிதானதல்ல. கடைசியாக 2014- ல் நான்காவது முயற்சியில் எனது நேர்முகத் தேர்வை வெற்றிகரமாக எதிர்கொள்ள இந்தப் பயிற்சியாளர் பணி பெரிதும் உதவியாய் இருந்தது’’ என்று தனது வெற்றிக்கான பாதையையும் பயணத்தையும் விளக்குகிறார் வான்மதி.

‘பெரிதினும் பெரிது கேள்’ என்ற பாரதியின் வரிகளைப் போல வானதியின் சாதனை உணர்வு இருந்துள்ளது. அத்தகைய உயர்வான லட்சியத்தோடு வான்மதியைப் போன்று முயற்சிகளைத் தொடர்ந்தால் இளைய தலைமுறையின் அனைத்துக் கனவுகளும் மெய்ப்படும்